திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ஆணைக்கிணங்க திமுக தேர்தல் வாக்குறுதியின் படி அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூபாய் ஆயிரம் வழங்க வேண்டியும் தமிழர்களுக்கு வழங்க வேண்டிய காவிரி நதி நீரை கர்நாடக அரசு திறக்க கோரியும் விலை நிலங்களை அழித்து வரும் NLC நிர்வாகத்தை கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட அவைத் தலைவர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது.
மேலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோஷங்கள் எழுப்பி சுமார் 50க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், மேலும் தேமுதிக கழக உயர்மட்ட குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி கண்டன உரையாற்றினார்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திருப்பத்தூர் நகர செயலாளர் மதன்ராஜ், மாவட்ட பொறுப்பாளர் ஆஞ்சி மாவட்ட துணை செயலாளர் சரவணன், பையஷ் பாஷா செந்தில்குமார் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக