கட்டுமான பணிகள் முடிந்த நிலையில், அதனை சென்னை இலங்கைத் தமிழர் மறுவாழ்வுத்துறை துணை ஆணையர் கோவிந்தசாமி நேற்று திறப்பு விழாவிற்காக நேரில் ஆய்வு செய்தார். ஆவின் போது, ஊத்தங்கரை தாசில்தார் திருமலை ராஜன், பீ.டி.ஓ .சிவப்பிரகாசம், ஒன்றிய சேர்மன் உஷாராணி, டெக்னிக்கல் இன்ஜினியர் நிஷார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, திறப்பு விழாவிற்காக புதிதாக கட்டப்பட்டுள்ள வீடுகளை ஆய்வு செய்தபோது, அப்பகுதியில் உள்ள பெண்கள், புதிதாக கட்டப்பட்டுள்ள வீடுகளில் உள்ள குறைகளை கொட்டித் தீர்த்தனர்.
இதில், கட்டடங்கள் தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ளதாகவும், திறப்பு விழா காண்பதற்கு முன்பாகவே மேற்கூறையில் வீடுகளில் நீர் கசிகின்றது. வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது, குளிப்பதற்கான குளியல் அறை இல்லாமல் உள்ளது. கழிவு நீர் செல்லும் கால்வாய்கள் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும், கழிவுநீர் முழுவதுமாக வெளியேற மாற்று வழி எதுவும் செய்யாமல் உள்ளனர்.
அனைத்து வீடுகளுக்கும் வழங்கப்பட்டுள்ள கழிவு நீர் தொட்டிகள், தரமற்ற முறையில் கட்டி உள்ளனர். செப்டி டேங் தற்பொழுது இடிந்து விழும் அவல நிலையில் உள்ளது. இதனை முழுமையாக சரி செய்து பிறகு திறப்பு விழா காண வேண்டும் என பகுதி பெண்கள் கூறுகின்றனர். தரமற்ற முறையில் நடைபெறும் பணிகள் குறித்து ஊத்தங்கரை பீடிஓ விடம் பலமுறை கூறியும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பகுதி வாழ் இலங்கைத் தமிழர்கள் புலம்பி வருகின்றனர்.
இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் எஸ். சத்தியநாராயணன்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக