வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த லட்சுமி திரையரங்கம் அருகில் இரும்பு பெட்டி கிடைத்ததாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக விரைந்து வந்த காவல் கண்காணிப்பாளர் ராமமூர்த்தி குடியாத்தம் லட்சுமி திரையரங்கம் அருகில் கிடைத்த இரும்பு பெட்டியால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து வருவாய் கோட்டாட்சியர் வெங்கட்ராமன் வட்டாட்சியர் விஜயகுமார் நகர்மன்ற தலைவர் சௌந்தரராஜன் நகர காவல் ஆய்வாளர் லட்சுமி ஆகியோர் நேரில் சென்று விசாரணை செய்து வருகின்றனர். இரும்பு பெட்டியை பார்க்க பொதுமக்கள் ஆவலாக வந்த வண்ணம் உள்ளனர் இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு காணப்பட்டது.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர்
கேவி ராஜேந்திரன்
.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக