வேலூர் மாவட்டம் குடியாத்தம் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் காவல் துறையுடன் இணைந்து போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி ஊர்வலம் காவல் துணை கண்காணிப்பாளர் ராமமூர்த்தி துவங்கி வைத்தார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகில் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் குடியாத்தம் காவல்துறை இணைந்து குடியாத்தம் பகுதியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு குறித்து ஊர்வலம் காவல் துணை கண்காணிப்பாளர் ராமமூர்த்தி கொடிஅசைத்து துவங்கி வைத்தார்.
இதில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் குடியாத்தம் நகரின் முக்கிய சாலைகளின் வழியாக போதை தடுப்பு விழிப்புணர்வு குறித்த பாறைகள் ஏந்தியும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக