பொன் புதுப்பட்டி ரோட்டரி சங்கத்தின் சார்பில் பொன்னமராவதி அரசு மகப்பேறு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சத்துணவு பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.02.08.2023 இன்று பொன்னமராவதி அமரகண்டன் குளக்கரையில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளுக்கு சத்துணவு பொருட்கள் அடங்கிய தொகுப்பு ரோட்டரி சங்கத்தின் சார்பில் வழங்கப்பட்டது.
நிகழ்வில் சுகாதார ஆய்வாளர் தியாகராஜன் வரவேற்று பேசினார்.ரோட்டரி சங்கத்தின் தலைவர் முனைவர் முடியரசன் தலைமை தாங்கினார். மருத்துவமனை மருத்துவ அலுவலர் டாக்டர் சிவகலை அவர்கள் நோயாளிகளுக்கு சத்துணவு பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை வழங்கி சிறப்பித்தார்.
நிகழ்வில் ரோட்டரி சங்கத்தின் செயலாளர் ராமச்சந்திரன், பொருளாளர் தட்சிணாமூர்த்தி, உறுப்பினர்கள் சரவணன், பேராசிரியர் குமாரசாமி, ராஜா, வெங்கடேச குப்தா, முரளிதரன், ரமேஷ், சுரேஷ்குமார், ஆறுமுகம், டாக்டர் செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மருத்துவர் சிவகலை எம்பிபிஎஸ் அவர்களின் ஒருங்கிணைப்பில்காசநோய் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜீவபாரதி சுகாதார ஆய்வாளர் தியாகராஜன் மருந்தாளுநர் கருப்பையா நிலைய செவிலியர் தீபா ஆகியோர் இந்த நலத்திட்ட பணிகளை செவ்வனே செய்து முடித்தனர். முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் பவுன்ராஜ் நன்றி உரை கூறினார்.
எம். மூர்த்தி, தமிழக குரல், மாவட்ட செய்தியாளர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக