தூத்துக்குடி - ஸ்ரீவைகுண்டம் அருகே குடும்ப தகராறில் மனைவியை அரிவாளால் தாக்கிய கணவர் கைது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 23 ஆகஸ்ட், 2023

தூத்துக்குடி - ஸ்ரீவைகுண்டம் அருகே குடும்ப தகராறில் மனைவியை அரிவாளால் தாக்கிய கணவர் கைது.

தூத்துக்குடி மாவட்டம், ராமநாதபுரம், செட்டிமலையான்பட்டி பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் பேச்சிமுத்து (37) என்பவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பேச்சிமுத்துவின் மனைவி ஸ்ரீவைகுண்டம் அருகே புதுபட்டியில் உள்ள அவரது அம்மா வீட்டில் கடந்த ஒரு வருடமாக வசித்து வருகிறார்.



இந்நிலையில் பேச்சிமுத்து நேற்று (22.08.2023) ஸ்ரீவைகுண்டம் புதுப்பட்டியில் உள்ள அவரது மாமியார் வீட்டிற்கு சென்று அவரது மனைவியை தன்னுடன் வருமாறு கூறியுள்ளார். இதற்கு அவரது மனைவி வர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பேச்சிமுத்து தகராறு செய்து அவரது மனைவியை அரிவாள் மற்றும் இரும்பு கம்பியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.


இதுகுறித்து மேற்படி பேச்சிமுத்துவின் மனைவி அளித்த புகாரின் பேரில் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் அன்னராஜ் வழக்கு பதிவு செய்து பேச்சிமுத்துவை கைது செய்தார்.

- தமிழக குரல் செய்திகளுக்காக Vn சரவணன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad