திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சட்டமன்ற தொகுதி உட்பட்ட தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் அனக்காவூர் ஊராட்சி ஒன்றியம் காரனை கிராமத்தில் 2020-2021 ஆம் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் ரூபாய் 7 லட்சத்து 49 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய பொது விநியோக கடை மற்றும் ரூபாய் 12. லட்சத்து 61 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஒ.ஜோதி திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி பொதுமக்களுக்கு பொருட்களை வழங்கினார்.
உடன் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், அனக்காவூர் ஒன்றிய குழு தலைவர் திலகவதி ராஜ்குமார், அனக்காவூர் திராவிட முருகன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் முருகேசன், ஊராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி பாலசுப்பிரமணியன் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.
- செய்யாறு செய்தியாளர் MS.பழனிமலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக