ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மற்றும் ஆல் தி சில்ரன் அறக்கட்டளை சார்பாக பாடந்தொரை அங்கன்வாடி மையத்தில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு பாலூட்டும் தாய்மார்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு பாடந்தொரை அங்கன்வாடி பணியாளர் தேவகுமாரி வரவேற்றார். போஷன் அபியான் திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர் ரகுவரன் தலைமை வகித்தார், ஆல் தி சில்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் முன்னிலை வகித்தார். தேவர்சோலை பேரூராட்சி 11, 14-ம் வார்டு உறுப்பினர்கள் ஹனீபா, சாய்னா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். பகுதி செவிலியர் பார்வதி, கிராம சுகாதார செவிலியர் பிரபாவதி இருவரும் தாய்ப்பால் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு வழங்கினர். ஆல் தி சில்ரன் அறக்கட்டளையின் மூலம் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டசத்து உணவு பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அங்கன்வாடி பணியாளர் தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் பலர் கலந்துகொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக