சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் "என் மண், என் மக்கள்" நடை பயணத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மண்பாண்ட கூட்டுறவு அங்கன்வாடி தொழிலாளர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
இதையடுத்து அவர் மானாமதுரையில் புகழ்பெற்ற கடம் இசைக்கருவியை இசைத்துப் பார்த்தார், பின்னர் அதேபோல் மண்பாண்ட தொழில் கூடத்தில் மண்பாண்டங்களை செய்ய உதவும் இயந்திரங்களை இயக்கியதோடு கடத்தையும் செய்து பார்த்தார்.
இந்நிகழ்வில் பாஜகவின் மாவட்டத் தலைவர் திரு மேப்பல் சக்தி, மாவட்டச் செயலாளர் திரு சங்கர சுப்பிரமணியன், 10வது வார்டு உறுப்பினர் திரு நமகோடி (எ) முனியசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்து பார்வையிட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக