நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே தாலி கயிறு மாற்றி கொண்ட தம்பதிகள்... - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 3 ஆகஸ்ட், 2023

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே தாலி கயிறு மாற்றி கொண்ட தம்பதிகள்...


 தாலி கயிறு மாற்றி கொண்ட தம்பதிகள்

 நீலகிரி மாவட்டம்  பந்தலூர் அருகே நெல்லியாளம் டான்டீ மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு தாலி கயிறு மாற்றியபின்னர், கோவில் வளாகத்தில் பெண்கள் அனைவருக்கும் மஞ்சள் கயிறு, குங்குமம், மஞ்சள் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து பெண்கள் தாலி கயிறு மாற்றி தாலி பெருக்கி கொண்டனர். தொடர்ந்து அனைவருக்கும் கூல், பொங்கல்  வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கமிட்டி நிர்வாகிகள் அண்ணாதுரை, ஜெகன்,அறிவழகன்,கிருஷ்ணமூர்த்திபெரியசாமி தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர். 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad