அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த நெல்லூர் பேட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு விலை இல்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் அப்பள்ளியின்பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் G.S. அரசு MC தலைமையில் நடைபெற்ற விழாவிற்கு அரசு மேல்நிலைபள்ளி மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைபள்ளியின் பயிலும் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதி வண்டியினை குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன் வழங்கினார். உடன் நகர மன்ற தலைவர் S. சௌந்தரராஜன் மற்றும் கழக நிர்வாகிகள், பள்ளிகளின் ஆசிரியர் ஆசிரியைகள் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், பள்ளியின் மேலாண்மை குழு நிர்வாகிகள் நல்லூர் பேட்டை அரசினர் பெண்கள் மேல்நிலை பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக செயற்குழு உறுப்பினர் S.ராமலிங்கம் மற்றும் மாணவ மாணவியர் கலந்து கொண்டனர் .
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக