ராணிப்பேட்டை மாவட்டம் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்ட திமுக மகளிர் தொண்டர் அணி மற்றும் நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் கலைஞர் அவர்களின் திராவிட மாடல் ஆட்சிக்கு பெரிதும் வழி காட்டுவது கலைஞர் அவர்களின் கலைப்பணியா? அல்லது அரசியல் பணியா? என்ற தலைப்பில் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ. லியோனி நடுவராக பங்கு பெறும் சிறப்பு பட்டிமன்றம் நிகழ்ச்சி வருகின்ற சனிக்கிழமை மாலை 6 மணி அளவில் பரமேஸ்வரமங்கலம் கிராமத்தில் நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி முடிப்பது குறித்து திமுக கிளை நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளர், நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ. வடிவேலு தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒன்றிய நிர்வாகிகள். பாண்டியன், அரிகிருஷ்ணன், பெருமாள், அப்துல் நசீர், கிளைக் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக