நேரு யுவகேந்திரா சார்பாக மரக்கன்றுகள் மற்றும் வீரதீர விருதுகள் வழங்கப்பட்டன. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 19 ஆகஸ்ட், 2023

நேரு யுவகேந்திரா சார்பாக மரக்கன்றுகள் மற்றும் வீரதீர விருதுகள் வழங்கப்பட்டன.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகில் அரசு மேல்நிலைப் பள்ளி O.சிறுவயல் இன்று காலை 0900 மணி அளவில் மரக்கன்றுகள் மற்றும் வீரதீர விருதுகள் வழங்கப்பட்டன. நேரு யுவகேந்திரா சிவகங்கை, படைவீரர்கள் பாசறை சிவகங்கை சீமை மற்றும் சுவாமி விவேகானந்தா யூத் & யோகா கிளப் காரைக்குடி இணைந்து பள்ளிக்கு மரக்கன்றுகள், இராணுவத்தில் போரில் வீரமரணம் அடைந்த வீரர்களின் வீரமங்கைகளுக்கு விருதுகள் அளிக்கப்பட்டதோடு குறைகள் கஷ்டங்களை கண்டறியப்பட்டன. 


அத்துடன் எல்லையில் தீவிரவாதிகளை ஒடுக்கும் பணியில் சிறப்பாக செயல்பட்டுமைக்கு சேனா மெடல் Hony Capt Arulsamy அவர்களை பாராட்டி கௌரவிக்கப்பட்டன. விழாவில் பஞ்சாயத்து தலைவர் O சிறுவயல், நேரு யுவகேந்திரா இயக்குனர், பள்ளி தலைமை ஆசிரியர், கமாண்டோ கந்தன், திரு யோகநாதன் அவர்கள் விழாவில் கலந்து சிறப்பித்தனர்.


படைவீரர்கள் பாசறை சிவகங்கை சீமை சார்பாக மாரத்தான் போட்டோவை நினைவு பரிசாக கௌரவிக்கும் விதமாக மதிப்பிற்குரிய பிரவீன்குமார் அவர்கள் சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டம் இயக்குனர் நேரு யுவகேந்திரா வழங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad