சோழத்தரம் அருகே வீராணம் ஏரி தண்ணீர் புகுந்து விவசாயப் பயிர்கள் கடும் சேதம். இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 19 ஆகஸ்ட், 2023

சோழத்தரம் அருகே வீராணம் ஏரி தண்ணீர் புகுந்து விவசாயப் பயிர்கள் கடும் சேதம். இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை.

கடலூர் மாவட்டம் சோழத்தரம்அருகே மணவெளி கிராமம் உள்ளது. இந்த கிராமம் வீராணம் ஏரி கரையோரம் இருக்கும் கிராமமாகும்.இங்கு தாழ்வான வயல்வெளிப் பகுதியில் வீராணம் ஏரியின் தண்ணீர் புகுந்ததால் சுமார் 40 ஏக்கருக்கு மேற்பட்ட மணிலா, நெல், கரும்பு, சவுக்கு கன்றுகள் தண்ணீரில் மூழ்கி  சேதம் அடைந்துள்ளது.


மணிலா அறுவடைக்குத தயாரான நிலையில்  அதற்குள் வீராணம் ஏரி தண்ணீர் புகுந்ததால் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது.அழுகிய பயிர்களை தோணியில் வைத்து கரையேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.  தண்ணீர் சூழ்ந்த மணிலா, நெல், கரும்பு சவுக்குக் கன்றுகள் உள்ளிட்டவைகளுக்கு இழப்பீடு வழங்க வேதனையோடு கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் இது குறித்து அவர்கள் தெரிவிக்கும் போது வீராணம் ஏரியில் தற்போது புதியதாக மேற்குப்பகுதியில் வடிகால் மதகு இரண்டு அமைக்கப்பட்டுள்ளன. இந்த மதகு கட்டும் பணிகள் சில நாட்களுக்கு முன்புதான் முடிந்தன. 


அதில் தற்போது ஷட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளது. அந்த ஷட்டர்கள் சரியாக தண்ணீரைத் தேக்குகிறதா என பரிசோதனை செய்த பிறகே தண்ணீர் தேக்கும் திறன் நிலையாக இருக்கும்படி செய்யமுடியும். ‌ஆனால் அதற்குள் வீராணம் ஏரியில் தற்போது நீர்வரத்து அதிகரித்து 46.25 அடியாக இருப்பதால் ஒவ்வொரு நிமிடமும் நீர்வரத்து கூடிக் கொண்டே செல்லும் நிலையில் உடனடியாக இந்த ஷட்டரை பரிசோதித்து சரி செய்ய வேண்டும். 


இல்லையேல் இன்னும் பல ஏக்கர் பயிர்கள் இப்படி ஒரு நிலையை சந்திக்க நேரிடும். அதிலும் மணிலா இன்னும் 15 தினங்கள் இருந்திருந்தால் நன்றாக விளைந்து அறுவடை செய்ய தோதான நிலைக்கு வந்திருக்கும். ஆனால் தற்போது தண்ணீர் சூழ்ந்துள்ளதால் பிஞ்சும் காயுமாக உள்ளதால் விவசாயிகள் மன  வேதனையோடு  மணிலாப் பயிர்களை தண்ணீரிலே தோணியை வைத்து  வெளியேற்றி வருகின்றனர். 


புதிதாக அமைக்கப்பட்ட ஷட்டர்ளை சரியாக பரிசோதனை செய்து தண்ணீர் உட்புகாமல்உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சேதமான பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையை விவசாயிகள் வைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad