வேலூர் மாவட்டம் மூஞ்சூர் பட்டு அடுத்த சின்னசப்தலிபுரம் மற்றும் கண்ணமங்கலம் மாணவர்களை பாராட்டி பதக்கங்கள் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி 20:08:2023 ஞாயிற்றுக்கிழமை மூஞ்சூர் பட்டு கிராமத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
சின்ன சேலம் ஆத்தூர் தலைவாசலில் நடை பெற்ற INDIA BOOK OF WORLD RECORDS (இந்தியன் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ல்) மூன்று மணி நேரம் இடை விடாமல் சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி திருவலத்தில் செம்மொழி உலக சாதனை 1000 முறை சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனர். ஜூலை 6 ம் தேதி சங்கராபுரத்தில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் கலந்து கொண்டு ஐந்து மாணவர்கள் முதல் பரிசு 10 மாணவர்கள் இரண்டாம் பரிசு 3 மாணவர்கள் மூன்றாம் பரிசு வெற்றி வாகை சூடினார்.
இந்நிகழ்ச்சியை பாராட்டும் விதமாக இன்று புஜ ருத்ர சிலம்பம் அகாடமி நிறுவன பயிற்சியாளர் (ஆசினி) புஸ்பா துணை பயிற்சியாளர் ஜெகன் முன்னிலையில் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ் கேடயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினர் Dr .Lee Shaolin master Bharath kala Rathna சிறப்பு அழைப்பாளராக Rtn பாபி கதிரவன் MC பாட்டாளி மக்கள் கட்சியின் வேலூர் மாவட்ட மகளிர் அணி செயலாளர் 53 வது வார்டு உறுப்பினர் . Dr. ரவிசங்கர் கால்நடை மருத்துவர் மக்கள் களப்பணி இயக்கம் நிறுவனத் தலைவர் பாரதிய ஜனதா கட்சியின் வேலூர் மாவட்ட துணைத் தலைவர் சங்கர் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு சட்ட விழிப்புணர்வு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் மு.பாக்கியராஜ் அனைவரும் கலந்துகொண்டு மாணவர்களுக்கு தற்காப்பு கலை மிகவும் அவசியம் என்றும் வலிமைமிக்க இந்த கலை அனைவரும் கற்றுக்கொண்டு பல்வேறு சாதனைகளைப் படைக்க வேண்டும் என்று பேசினார். மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக