வேலூரில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திமுக சார்பில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2023

வேலூரில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திமுக சார்பில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம்.

வேலூர்  மாவட்டம்   கோட்டை அருகே இன்று நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும் அதற்கு துணையாக இருக்கும் ஒன்றிய அரசை கண்டித்தும் திமுக சார்பில்  நடைபெற்று வரும் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் மாவட்ட திமுக இளைஞர் அணி மாணவர் அணி, மருத்துவரணி சார்பில் மாணவர்களை மரணக்குழியில் தள்ளும் நீட் தேர்வை  ரத்து செய்ய  மறுக்கும்,  ஒன்றிய அரசையும் அதற்கு துணைப்போகும் ஆளுநரையும் கண்டித்து மாபெரும் உண்ணாவிரதபோராட்டம்.



வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் தலைமையில் நடைபெற்று வரும் மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டத்தில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் துரைமுருகன் கதிர் ஆனந்த் கலந்துக்கொண்டு கண்டன உரை ஆற்றினார்.


போராட்டத்தில் திமுக மாவட்ட அவைத்தலைவர் தலைவர்  தி.அ.முகமது சகி மாநகர திமுக செயலாளர் ப.கார்த்திகேயன், குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன், வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா, துணை மேயர் எம் சுனில் குமார், குடியாத்தம் நகர மன்ற தலைவர் சௌந்தரராஜன், காட்பாடி பெருங்குழு தலைவர் வேல்முருகன், காட்பாடி திமுக செயலாளர் வன்னியராஜா, மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னிய ராஜா, வார்டு உறுப்பினர் டீட்டா சரவணன் மற்றும் திமுக நிர்வாகிகள், மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலநாதுக்கொண்டனர்.



- வேலூர் தாலுக்கா செய்தியாளர் மு.இன்பராஜ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad