மானாமதுரையில் கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழா - கருத்தரங்கம் மற்றும் நலத்திட்டம் வழங்கும் விழா அமைச்சர் தலைமையில் நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2023

மானாமதுரையில் கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழா - கருத்தரங்கம் மற்றும் நலத்திட்டம் வழங்கும் விழா அமைச்சர் தலைமையில் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்ட திமுக இலக்கிய அணி சார்பில் "கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழா - கருத்தரங்கம் மற்றும் நலத்திட்டம் வழங்கும் விழா" மானாமதுரையில் உள்ள அனுசியா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இவ்விழா மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் சிவகங்கை மாவட்ட கழக செயலாளர் திரு கே. ஆர். பெரியகருப்பன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.


இக்கருத்தரங்கில் முன்னாள் அமைச்சர் மாநில இலக்கிய அணி புரவலர் திரு மு. தென்னவன் அவர்கள் தொடக்க உரை ஆற்றினார், அவரைத் தொடர்ந்து 'மறக்க முடியுமா மறக்க முடியுமா' என்ற தலைப்பில் திமுக மாநில இலக்கிய அணி இணைச் செயலாளர் கவிஞர் திரு ஈரோடு இறைவன் அவர்களும், சொல்லும் செயலும்' என்ற தலைப்பில் முன்னாள் அமைச்சர் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ. தமிழரசிரவிக்குமார் அவர்களும், 'மீட்சியும் புரட்சியும்' என்ற தலைப்பில் திராவிட இயக்க தமிழர் பேரவையின் கொள்கை பரப்பு செயளாலர் திருமதி இரா. உமா அவர்களும், 'பேனாவும் செந்நாவும்' என்ற தலைப்பில் உளவியலாளர் முனைவர் திருமதி சீ. பாண்டிசக்தி அவர்களும் அரங்கமதிர பேருரை ஆற்றினார்கள்.


மாநில இலக்கிய அணி செயலாளர் வி.பி. கலைராஜன், மாவட்ட அமைப்பாளர் கவிஞர் சிவமுத்து வளவன், மாவட்ட தலைவர் புலிகுத்தி சீனிவாசன், துணைத்தலைவர் ஆண்டனிசேவியர், துணை அமைப்பாளர் ச. சுப்பிரமணியன், துணை அமைப்பாளர் ம. ராதாகிருஷ்ணன், துணை அமைப்பாளர் சுப்பிரமணியன், துணை அமைப்பாளர் ஜி. ராஜபாண்டியன், துணை அமைப்பாளர் அழகையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


கருத்தரங்கின் இறுதியாக ஒன்றிய கவுன்சிலர், கிழக்கு ஒன்றிய இலக்கிய அணி அமைப்பாளர் ஜி. வேல்முருகன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார். மேலும் இந்நிகழ்வில் மானாமதுரை நகர் கழக செயலாளர் திரு க. பொன்னுச்சாமி, நகர் மன்ற தலைவர் திரு எஸ். மாரியப்பன் கென்னடி, நகர் மன்ற துணை தலைவர் திரு பாலசுந்தர், கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் திரு துரை. ராஜாமணி, மேற்கு ஒன்றிய செயலாளர் திரு அண்ணாதுரை, தலைமை செயற்குழு உறுப்பினர் திரு ராஜாங்கம், தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஏ. ஆர். ஜெயமூர்த்தி ஒன்றிய பெருந்தலைவர் திருமதி லதா அண்ணாதுரை, நகர் இளைஞர் அணி திரு பொறியாளர் சு. சந்தனராஜ் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பல்வேறு நிர்வாகிகளும் தொண்டர்களும் திரலாக கலந்துக்கொண்டனர்.


- செய்தியாளர் லிவிங்ஸ்டன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad