ஜூனியர் ரெட் கிராஸ் சார்பில் பயிற்சி சான்றிதழ் வழங்கி பாராட்டு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2023

ஜூனியர் ரெட் கிராஸ் சார்பில் பயிற்சி சான்றிதழ் வழங்கி பாராட்டு.

வேலூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் மெட்ரிக்  மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான ஜூனியர் ரெட் கிராஸ் இரண்டு நாள் பயிற்சி கருத்தரங்கம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செ.‌மணிமொழி அவர்களின் வழிகாட்டுதலுடன் வேலூர் சத்துவாச்சாரி ஹோலி கிராஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.  


பயிற்சி முடித்த ஆசிரியர்களுக்கு ஆலோசகர் சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஜூனியர் ரெட் கிராஸ் மாவட்ட துணைத் தலைவர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் தனியார் பள்ளிகள் கே.எஸ்.ரவி தலைமை தாங்கினார்.


மாவட்ட கல்வி அலுவலர் இடைநிலை கல்வி மற்றும் ஜூனியர் ரெட் கிராஸ் மாவட்ட தலைவர் மு.அங்குலட்சுமி அவர்கள் பயிற்சி கருத்தரங்கினை துவக்கி வைத்தார்கள் முன்னதாக ஜூனியர் ரெட் கிராஸ் மாவட்ட அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன் வரவேற்று பேசினார்.  


ஹோலி கிராஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் லில்லி கிரேஸ், இந்தியன் ரெட் கிராஸ் சங்கத்தின் காட்பாடி கிளை துணைத் தலைவர் ஆர்.சீனிவாசன், ஜாக்டோ ஜியோ மாநில குழு உறுப்பினர் அ.சேகர்,  தொழிற்கல்வி ஆசிரியர் ச.சச்சிதானந்தம் ரோட்டரி இன்டர்நேஷனல் சங்கத்தின் கல்விக்குழு தலைவர் ஆ.ஜோசப் அன்னையா பி.எம்.டி.ஜெயின் பள்ளியின் செயலாளர் ருக்ஜி ராஜேஷ் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.

அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன் இணை அமைப்பாளர் எஸ்.ரகுபதி பொருளாளர் க.குணசேகரன் துணைத்தலைவர் எஸ்.எஸ்.சிவவடிவு, இராணிப்பேட்டை மாவட்ட அமைப்பாளர் கே.வி.கிருபானந்தம் ஆகியோர் பள்ளிகளில் ஜூனியர் ரெட் கிராஸ் நடைபெறும் செயல்பாடுகள் குறித்தும் ஜே.ஆர்.சி பாடல், வரவேற்பு, நன்றி கூறும் வகையில் கைத்தட்டல் உறுதிமொழி ஏற்றல் கொடி ஏற்றும் இறக்கும் முறை,  கொடி வணக்க பாடல் முதலுதவி, பேரிடர் மேலாண்மை, தீ தடுப்பு பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பயிற்சி அளித்தனர்.


இந்த பயிற்சி கருத்தரங்கமானது நடைபெற்றது. பயிற்சியில் பங்கேற்ற அனைவருக்கும் ஜே.ஆர்.சி ஆலோசகர்கள் என்ற சான்றிதழ் வழங்கி பாராட்டப்பட உள்ளனர்.
 


- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad