மானாமதுரை கன்னார் தெரு அரசு மதுபான கடையில் திருடர்கள் கைவரிசை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 22 ஆகஸ்ட், 2023

மானாமதுரை கன்னார் தெரு அரசு மதுபான கடையில் திருடர்கள் கைவரிசை.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள கண்ணார் தெருவில் 7544 என்ற கடை எண்ணில் அரசு மதுபான கடை மற்றும் பார் இயங்கி வருகிறது. நேற்று மதுபான கடையை உடைத்த மர்ம நபர்கள் உள்ளே வைக்கப்பட்டிருந்த பத்தாயிரம் ரொக்க பணம் மற்றும் நாற்பதாயிரம் ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்களையும் திருடிச் சென்றுள்ள சம்பவம் சுற்றுப்பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் அதே கடையில் லாக்கரில் இருந்த சுமார் ஆறு லட்சம் ரூபாய் திருடர்கள் கண்ணில் படாததால் தப்பியது. திருடர்கள் தங்களின் தடையங்களை காவல்துறையின் கண்களுக்கு புலப்படாதவாறு மறைப்பதற்கு கடையை சேதப்படுத்தி தப்பித்துள்ளனர். 


மானாமதுரை நகர் காவல்துறைக்கு பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வேடிக்கை பார்த்த பொதுமக்களை அப்புறப்படுத்தி சேதமடைந்த கடையை மேற்பார்வை செய்து அருகில் உள்ள வீட்டாரிடம் கூடுதல் தகவல்களை பெற்றனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து திருடர்களை பிடிக்க தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


- செய்தியாளர் லிவிங்ஸ்டன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad