தூத்துக்குடி - தாளமுத்துநகரில் கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 22 ஆகஸ்ட், 2023

தூத்துக்குடி - தாளமுத்துநகரில் கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது.

தூத்துக்குடி, சுந்தரவேல்புரம் பகுதியை சேர்ந்த சுந்தரேசன் மகன் சங்கரநாராயணன் (31) என்பவர் அவரது நண்பரான தூத்துக்குடி பூபாண்டியாபுரம் கிழக்கு பகுதியை சேர்ந்த மூர்த்தி (எ) படையப்பா மகன் ராமலிங்கா (எ) டேவிட் (29) என்பவரிடமிருந்து பணம் கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில் மேற்படி ராமலிங்கா (எ) டேவிட் என்பவர் சங்கர நாராயணனுக்கு பணத்தை திருப்பி தராததால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.



இதன் காரணமாக கடந்த 19.08.2023 அன்று மேற்படி சங்கரநாராயணன் அவரது நண்பரான தூத்துக்குடி பூபாண்டியாபுரம் பகுதியில் உள்ள மங்கள்ராஜ் என்பவரின் வீட்டின் முன்பு அவரிடம் பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த மேற்படி ராமலிங்கா (எ) டேவிட் என்பவர் சங்கரநாராயணனிடம் தகராறு செய்து அவரை கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.


இதுகுறித்து மேற்படி சங்கரநாராயணன் அளித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சண்முகசுந்தரம் வழக்குபதிவு செய்து மேற்படி இராமலிங்கா (எ) டேவிட்டை கைது செய்தார். மேலும் இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

- தமிழக குரல் செய்திகளுக்காக Vn சரவணன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad