சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஊராட்சி ஒன்றியம் ஆலம்பச்சேரி கிராமத்தில் 'முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டம் - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 26 ஆகஸ்ட், 2023

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஊராட்சி ஒன்றியம் ஆலம்பச்சேரி கிராமத்தில் 'முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டம்

முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டத்தினை தொடக்கப் பள்ளியில் துவங்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர்.


மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை தமிழ்நாடு முழுவதும் உள்ள 31,008 அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் 17 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் விரிவுபடுத்தி தமிழக அரசு அரசாணை பிறப்பித்த நிலையில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் பள்ளிகளுக்கு நேரில் சென்று இத்திட்டத்தினை தொடங்கி வைத்து வருகிறார். 


அதன் தொடர்ச்சியாக சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஊராட்சி ஒன்றியம் ஆலம்பச்சேரி கிராமத்தில் 'முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டத்தினை' ஆலம்பச்சேரி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாண்புமிகு முன்னாள் அமைச்சர் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ. தமிழரசிரவிக்குமார் அவர்கள் துவக்கி வைத்தார். இதில் பள்ளியில் உள்ள அனைத்து சிறுவர் சிறுமியர்களுக்கும் சிற்றுண்டி பரிமாறிய சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் குழந்தைகளை தன் மடியில் அமர வைத்து உணவை ஊட்டி திட்டத்தினை தொடங்கி வைத்தார்.


அதேபோல் மேலநெட்டூர் ஊராட்சி ஆலம்பச்சேரி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூபாய் 10.18 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டிடத்தையும் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ. தமிழரசிரவிக்குமார் அவர்கள் திறந்து வைத்தார்.


இந்நிகழ்வில் மானாமதுரை கிழக்கு ஒன்றிய செயலாளர் திரு துரை ராஜாமணி, இளையான்குடி வடக்கு ஒன்றியம் செயலாளர் திரு சுப. மதியரசன், ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் திருமதி லதா அண்ணாதுரை, மேற்கு ஒன்றிய செயலாளர் திரு அண்ணாதுரை, மேலநேட்டூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் திருமதி சங்கீதா ராஜ்குமார், கிளை செயலாளர் திரு நிதியரசன், தகவல் தொழில்நுட்ப அணி திரு சத்தியேந்திரன், ஒன்றிய மகளிரணி திருமதி பார்வதி, மேலநேட்டூர் நிர்வாகிகள் திரு கருப்பையா, திரு விஜயராமன், திரு காளிமுத்து, திரு கருணாகரன், திரு சிவநேசன், திரு ராஜபாண்டி, திரு கண்ணன், திரு அழகேசன், மாங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் திரு தேசிங்கு ராஜா, மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் திரு புவியரசு, திருப்புவனம் திரு முருகன், அரசு துறை அதிகாரிகள், பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர் பெருமக்கள், குழந்தை செல்வங்கள், ஊர் பொதுமக்கள், கழக முன்னோடிகளும் மற்றும் திமுக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

- செய்தியாளர் லிவிங்ஸ்டன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/