ஜெயமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு பொறுப்பு செயலாளரை கண்டித்து கூட்டுறவு சொசைட்டி தலைவர் முன்னிலையில் பொறுப்பேற்க வந்த செயலாளர் அலுவலகத்திற்கு பூட்டு போட்டு பூட்டினார். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2023

ஜெயமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு பொறுப்பு செயலாளரை கண்டித்து கூட்டுறவு சொசைட்டி தலைவர் முன்னிலையில் பொறுப்பேற்க வந்த செயலாளர் அலுவலகத்திற்கு பூட்டு போட்டு பூட்டினார்.


தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஜெயமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் மலைச்சாமி என்பவர் நீண்ட காலமாக செயலராக பணியாற்றி வந்துள்ளார் இந்நிலையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த பிரச்சனை அடகு வைத்த நகையை முறைகேடு செய்ததாக அவர் மீது புகார் எழுதியதை தொடர்ந்து பணி நீக்கம் செய்யப்பட்டனர் மேலும் அப்போது அங்கு பணிபுரிந்து வந்த மலைச்சாமி அவர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால்  தொடர்ந்து மலைச்சாமி பணி நீக்கம் செய்யப்பட்டார்.


அதனைத் தொடர்ந்து குள்ளப்புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளராக பணியாற்றி வந்த சேகர் என்பவரை ஜெயமகுளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் கூடுதல் பொறுப்பாளராக நியமனம் செய்தனர்.


இந்நிலையில்  மலைச்சாமி மீது எந்த தவறும் இல்லை என  நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் இந்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை முடிவடைந்து மலைச்சாமி பணி நீக்கத்தை நீதிபதி ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மலைச்சாமி என்பவரை எம்டிஎஸ்பிஎல் 95 ஜெயமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்சங்கத்தின் தலைவர் குமரேசன் இடம் நீதிமன்ற உத்தரவு ஆணையை வழங்கி உள்ளார்.


அதன்பின்பு ஜெயமங்கலம் தொடக்கவேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் குமரேசன்  தலைமையில் உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு மலைச்சாமி என்பவர் தொடர்ந்து பணியாற்றிட என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது, அதன் பின்பு மலைச்சாமி செயலாளராக நிர்வாககுழுவின் மூலம் பணி  ஆணை  வழங்கப்பட்டது. 


இந்நிலையில் தற்போது பொறுப்புச் செயலாளராக பணியாற்றி வரும் சேகர் என்பவர் நீதிமன்ற உத்தரவை பொருட்படுத்தாமல் மலைச்சாமி என்பவரை பணியாற்ற விடாமல் தடுக்கும் விதமாக அலுவலகத்தை பூட்டிவிட்டு சாவி எடுத்துக்கொண்டு வீட்டுக்குச் சென்று விட்டதாகவும் இந்நிலையில் அலுவலகத்தில் பொறுப்பேற்க வந்த மலைச்சாமி அலுவலகம் வளாகத்தில் நீண்ட நேரம் காத்திருந்தும் அலுவலகத்தை திறக்காததால் அங்கு வந்த கூட்டுறவு சொசைட்டி தலைவர் இடம் முறையிட்டுள்ளார்.


மேலும் மலைச்சாமி பணியாற்ற அனுமதி கடிதம் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் மலைச்சாமி பொறுப்பேற்க விடாமல் தடுத்து வரும் தற்போது பொறுப்புச் செயலாளர் சேகர் அலுவலகத்தை பூட்டி விட்டு சென்றதால் சேகரின் செயல்பாட்டை கண்டித்து அவர் மீது உடனடியாக துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் தலைவர் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் மலைச்சாமி அலுவலகத்தின் கேட்டுக்கு பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad