ராணிப்பேட்டை மாவட்டத்தில் தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு காவிரிப்பாக்கம் வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகள்! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 31 ஆகஸ்ட், 2023

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு காவிரிப்பாக்கம் வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகள்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு காவிரிப்பாக்கம் வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகள்! 



ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த அன்வார்திகான்பேட்டை அரசினர் உயர்நிலைப்பள்ளியில் நடத்தும் விளையாட்டு போட்டிகள் சயனபுரம் ஊராட்சி மன்ற தலைவர். பவானி வடிவேலு அவர்கள் தலைமையில் நடைபெற்றது. நெமிலி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர். வேதையா அவர்கள் முன்னிலை வகித்தார். காவேரிப்பாக்கம் பகுதி செயலாளர். குமணன் அவர்கள் வரவேற்றார். காவேரிப்பாக்கம் வட்டார பகுதிக்கு உட்பட்ட நெமிலி, காவேரிப்பாக்கம், அரக்கோணம் ஆகிய ஒன்றியங்களில் உள்ள 34 பள்ளிகளின் மாணவர்கள் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல், குண்டு எரிதல், கபடி, கைப்பந்து, பூப்பந்து, தொடர் ஓட்டம் (மாரத்தான்) ஆகிய விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக நெமிலி ஒன்றிய பெருந்தலைவர். பெ. வடிவேலு அவர்கள் கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஜே. ஆர். சி கொடி மற்றும் ஒலிம்பிக் கொடிகள் ஏற்றப்பட்டன. முன்னதாக விவேகானந்தா பள்ளி மாணவிகளின் கலைநிகழ்ச்சி மற்றும் போட்டிகளை தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. இதில் நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர். எஸ்.ஜி.சி.பெருமாள் , நெமிலி ஒன்றிய துணை பெருந்தலைவர். தீனதயாளன், மாவட்ட கவுன்சிலர். சுந்தராம்பாள் பெருமாள், காவல் துறையின் சார்பில் எஸ்.ஐ.லோகேஷ், சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர். பாலசுப்ரமணியன், நடராஜன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் தாளாளர். விஜயபாஸ்கர், உடற்கல்வி ஆசிரியர். மணி, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர். 

செய்தியாளர் பிரகாசம்
நெமிலி தாலுகா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/