திருத்தணி அருகே சிவாடா கிராமத்தில் அருந்ததியர் வீடுகளின் அவல நிலை! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 31 ஆகஸ்ட், 2023

திருத்தணி அருகே சிவாடா கிராமத்தில் அருந்ததியர் வீடுகளின் அவல நிலை!

திருத்தணி அருகே சிவாடா கிராமத்தில் அருந்ததியர் வீடுகளின் அவல நிலை! 



திருத்தணி தாலுகா, திருத்தணியில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சிவாடா கிராமத்தில் அருந்ததியர் வசிக்கும் பகுதியில் சுமார் 30 வீடுகள் உள்ளன. இந்த வீடுகள் மறைந்த முன்னாள் முதலமைச்சர். எம். ஜி. ஆர் அவர்கள் ஆட்சி  காலத்தில் கட்டி தந்த தொகுப்பு வீடுகளாகும். இந்த தொகுப்பு வீடுகள் இடிந்த நிலையில் உள்ளன சிவாடா அருந்ததியர் பகுதியில் வாழும் அருந்ததியர் மக்களுக்கு சுடுகாடு வசதியும் இல்லை, பொதுவான தார் சாலை வசதியும் இல்லை அவர்களுக்கு அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமலும் இடிந்த நிலையில் உள்ள வீடுகளிலேயே தினம் தினம் பயந்து தங்களது வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். அவர்களது இந்த அவல நிலையை போக்க நமது தேசம் கட்சியின் மாநில தலைவர். வழக்கறிஞர். என். லட்சுமிபதி அவர்கள் தலைமையில் நமது தேசம் கட்சியின் குழுவினர் அப்பகுதிக்கு சென்று பார்வையிட்டு அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர். அதை தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு வருகின்ற திங்கட்கிழமை அன்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் அருந்ததியர் மக்களுக்கு தொகுப்பு வீடுகள் அமைத்து தர மனு கொடுக்கும் போராட்டத்தை அறிவித்துள்ளனர். 

செய்தியாளர் பிரகாசம்
நெமிலி தாலுகா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/