திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரம் ஒன்றியம் T. பண்ணைப்பட்டி அருகே குட்டிகரடு என்ற பகுதியில் சுமார் 150ஆண்டு பழமை வாய்ந்த புளியமரம் ஒன்று இருந்தது.நேற்று பெய்த கனமழை காரணமாக பழமை வாய்ந்த அந்த புளியமரம் கோம்பை செல்லும் சாலையில் வேரோடு சாய்ந்தது.
போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதால் இதனை அப்புறபடுத்தும் பணி பண்ணைப்பட்டி ஊராட்சி சார்பாக நடைபெற்று வருகிறது.150 ஆண்டு பழமை வாய்ந்த மரம் மீது பாசம் கொண்ட அப்பகுதி மக்கள் இதனால் மனவேதனை அடைந்து, ஊராட்சி நிர்வாகம் அந்த மரத்தை வேறொரு பகுதியில் எடுத்து மீண்டும் நட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக