கொழுமத்தில் கலைஞர் பிறந்த நாள் விழா! எம்பி பங்கேற்பு
திருப்பூர் தெற்கு மாவட்டம், மடத்துக்குளம் கிழக்கு ஒன்றியம், கொழுமம் ஊராட்சியின் சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கொழுமம், குளத்துப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் பயிலும் மாணவச் செல்வங்களுக்கு பேனா, பென்சில், இனிப்புகள், புத்தகங்கள், டிபன் பாக்ஸ், லஞ்ச் பேக், வாட்டர் பாட்டில் முதலிய பொருட்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு மடத்துக்குளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு. இரா. ஜெயராமகிருஷ்ணன் அவர்கள் தலைமையில், சிறப்பு விருந்தினராக பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் கு.சண்முகசுந்தரம் அவர்கள் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட கழக பொருளாளர் முபாரக் அலி, ஒன்றிய கழக செயலாளர் சாகுல் ஹமீது, மற்றும் கழக முன்னணியினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களின் தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் ஊக்கத்தொகை வழங்குவதாக கூறினார்.திட்டத்தை நிறைவேற்றும் வகையில் இரண்டாம் கட்டமாக திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டத்தில் ஆகஸ்ட் 5ஆம் தேதி ஆரம்பத்து 16ஆம் தேதி வரை இம்முகாம் நடைபெற உள்ளது.திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் கணியூர் பேரூராட்சியில் இம்முகாமானது கணியூர் ஸ்ரீ வெங்கட கிருஷ்ணா மேல்நிலைப் பள்ளியில் விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டு ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டது. இதன் செயல்பாடு குறித்து கணியூர் பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் மேற்பார்வையிட்டனர்.தமிழகம் முழுவதும் ஆம்புலன்ஸ் சேவை - தமிழன்னை அறக்கட்டளைதிருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு தமிழன்னை அறக்கட்டளை உரிமையாளரும் நிறுவனருமான எம்.தமிழரசன் அவர்கள் அன்பளிப்பு வழங்கினார்.திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் கணியூரைச் சேர்ந்த எம்.தமிழரசன் அவர்கள் அவசர காலகட்டத்தில் மக்களுக்கு உதவும் வகையில் திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு ஆகிய மாவட்டங்களின் முக்கிய நகரங்களில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் குறைந்த கட்டணத்தில் ஆம்புலன்ஸ் சேவை செய்து வருகின்றார். மிகவும் ஏழ்மையான மக்களுக்கு மக்களுக்கு இலவசமாகவும் சேவை செய்து வருகின்றார்.இவர் தனது சேவையை தமிழகம் முழுவதும் கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.தமிழக குரல் செய்திகளுக்காகNA.Thirunavukkarasu..B.Sc..,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக