கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 19 ஆகஸ்ட், 2023

கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்.


இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.வளர்மதி மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள் மற்றும் நலதிட்ட உதவிகளை வழங்கினார்கள்.


கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது, இம்முகாமில் எலும்பு முறிவு மருத்துவர், எலும்பியல் நிபுணர், குழந்தை நல மருத்துவர், மன நல மருத்துவர். கண் மருத்துவர், காது, மூக்கு, தொண்டை, நிபுணர் உள்ளிட்ட பிரிவு மருத்துவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர், இம்முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு மேற்கொள்ளப்பட்டுவரும் பரிசோதனைகளை பார்வையிட்டு அந்தந்த பிரிவு மருத்துவரிகளிடம் கேட்டறிந்தார்கள். 

மேலும் இம்முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட தொழில்மையம் மற்றும் தாட்கோ மூலம் வங்கிக் கடனுதவி வழங்குவதற்கான சிறப்பு முகாம் மற்றும் வேலைவாய்ப்பு முகாம், முன்னோடி வங்கி மூலமாக மாற்றுத்திறனாளிகளுக்கு வங்கி சார்ந்த கடன் உதவிகள் பெறுவதற்கான வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் இச்சிறப்பு முகாமில் மேற்கொள்ளப்பட்டன. கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற இச்சிறப்பு முகாமில் மொத்தம் 325 மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனர்.

இதில் 158 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள் மற்றும் 87 மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டைகள் 49 மாற்றுத்திறனாளிகளுக்கு முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு அடைகள் வழங்கப்பட்டன. மேலும் முன்னோடி வங்கி மூலம் வங்கி கடன் மானியம் வாழங்கும் திட்டத்தின் கீழ் வங்கி கடன் கோரி 62 விண்ணப்பங்களும், மாவட்ட தொழில் மையத்தின் மூலம் கடன் உதவி பெற்று தொழில் தொடங்க வேண்டி 17 விண்ணப்பங்களும், தாட்கோ கடன் வேண்டி 4 விண்ணப்பங்களும், ஸ்கூட்டர். சக்கர நாற்காலி, ஊன்றுகோள் உள்ளிட்ட உபகரணங்கள் வேண்டி 92 விண்ணப்பங்களும் இம்முகாமில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகளிடமிருந்து வரப்பெற்றுள்ளன. 


இச்சிறப்பு முகாமில் 158 மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவச் சான்றுடன்கூடிய அடையாள அட்டைகளையும் மற்றும் 87 மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டைகள் 49 மாற்றுத்திறனாளிகளுக்கு முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு அடைகள் 24 மாற்றுத்திறனாளிகளுக்கு பாதுகாவலர் நியமன சான்றுகளையும் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.65000 ஆயிரம் வீதம் ரூ.1.30 இலட்சம் மதிப்பீட்டிலான நவீன செயற்கை கால்கள் உள்ளிட்ட அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.வளர்மதி வழங்கினார்கள்.


இம்முகாமில் மாற்றுத்திறனாளி நல அலுவலர் சரவணகுமார், முன்னோடி வங்கி, மாவட்ட வேலைவாய்ப்பு மையம், மாவட்ட தொழில் மையம், தாட்கோ, மருத்துவ காப்பீடு திட்டம், உள்ளிட்ட துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad