ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஒன்றியத்துக்கு உட்பட்ட 285 சமையல் பொறுப்பாளர்கள் உதவியாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் சோளிங்கர் தட்டான் குளம் அருகே தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது
இந்த அவசர ஆலோசனைக் கூட்டத்திற்கு வாழ்வாதார இயக்க வட்டார மேலாளர் அலமேலு தலைமையிலும் சுசீலா. கவிதா. சரவணன். பூபதி. சன்முகம் .உள்ளிட்ட மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோர் முன்னிலையில் சோளிங்கர் ஒன்றிய முழுவதும் உள்ள 285 சமையல் பொறுப்பாளர்கள் உதவியாளர்கள் மற்றும் சத்துணவு அமைப்பாளர்கள் உள்ளிட்டோருக்கான அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் சோளிங்கர் ஒன்றிய குழு பெருந்தலைவர் கலைக்குமார். சோளிங்கர் வட்டார வளர்ச்சி அலுவலர் வஜ்ரவேலு .வெங்கு பட்டு ஒன்றிய குழு உறுப்பினர் ராமன். ஆகியோர் கலந்து கொண்டு காலை சமையல் பணியாளர்களுக்கு ஆலோசனை வழங்கினார்கள், இக்கூட்டத்தில் மாதிரி சமையல் செய்வதற்காகவும் திங்கட்கிழமை காலை 6 மணி அளவில் அனைத்து காலை சமையல் பணியாளர்களும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பள்ளிகளுக்கு செல்ல வேண்டும் என்றும். எட்டரை மணிக்கு சமையல் முடிக்க வேண்டும், ஒன்பது மணிக்கு அனைத்து குழந்தைகளுக்கும் சமையல் பரிமாற வேண்டும், பதினோரு மணிக்குள்ளாக அனைவருக்கும் சமையல் வழங்கப்பட்டு ஆன்லைன் மூலமாக சமையல் துவக்கம் சமையல் முடிவு உணவு பரிமாற்றம் துவக்கம் முடிவு ஆகிய நேரங்களை கைப்பேசியின் மூலம் படம் எடுத்து அவ்வப்போதே பதிவு செய்ய வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கப்பட்டது.
மேலும் தாங்கள் செய்கின்ற அனைத்து சமையலிலும் மாதிரி உணவு எடுத்து வைக்க வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் சத்துணவு அமைப்பாளர்கள் காலை உணவு சமையல் பொறுப்பாளர்கள் உதவியாளர்கள் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக