திருப்பூரில் தேமுதிக சார்பில் விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 10 ஆகஸ்ட், 2023

திருப்பூரில் தேமுதிக சார்பில் விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

திருப்பூர் மாவட்ட தேமுதிக சார்பில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்திற்கு முன்பு விலைவாசி உயர்வை கண்டித்தும் மற்றும் மகளிர் உரிமைத்தொகை பெண்கள் அனைவருக்கும் கொடுக்க வேண்டும், தமிழகத்திற்கு சேர வேண்டிய காவிரி நீரை பெற்று தர கோரியும் திருப்பூர் தொழில் வளம் பாதித்த நிலையில் மின்சார கட்டண உயர்வை கண்டித்தும் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 


மாநகர் மாவட்ட செயலாளர் பி. ஆர். குழந்தைவேலு தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட செயலாளர் ஆறுச்சாமி வடக்கு மாவட்ட செயலாளர் பிரசாந்த் குமார் முன்னிலை வகித்தனர். மாநில கழக துணைத் தலைவர் அக்பர் மாநில தொழிற்சங்க துணை செயலாளர் பொன் இளங்கோ ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தேமுதிகவினர் தமிழக‌அரசை கண்டித்து கோசங்களை எழுப்பினர். 


- மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad