சிவகங்கை மாவட்டம், சிவகங்கை மருது பாண்டியர் அரசு மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் மற்றும் கல்வித்துறை மூலம் "வண்ண சிறகுகள்" திட்டத்தினை, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், துவக்கி வைத்தார் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 19 ஆகஸ்ட், 2023

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை மருது பாண்டியர் அரசு மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் மற்றும் கல்வித்துறை மூலம் "வண்ண சிறகுகள்" திட்டத்தினை, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், துவக்கி வைத்தார்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு நலனை உறுதிசெய்யும் வகையில்,
மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் "வண்ண சிறகுகள்" திட்டம் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் சிறப்பாக செயல்படுத்தப்படவுள்ளது ,
பெண் ஆசிரியர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சியினை , 
மாவட்ட ஆட்சித்தலைவர்  ஆஷா அஜித், துவக்கி வைத்து தகவல்.



சிவகங்கை மாவட்டம், சிவகங்கை மருது பாண்டியர் அரசு மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் மற்றும் கல்வித்துறை மூலம் "வண்ண சிறகுகள்" திட்டத்தினை, மாவட்ட ஆட்சித்தலைவர்  ஆஷா அஜித், துவக்கி வைத்து தெரிவிக்கையில்:


        பெண் குழந்தைகள் பாதுகாப்பு நலனை உறுதிசெய்யும் வகையில் "வண்ண சிறகுகள்" என்ற திட்டத்தின் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் சிறப்பாக செயல்படுத்திட, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் மற்றும் கல்வித்துறை மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 இதற்கென, ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு பெண் ஆசிரியா் தோ்வு செய்யப்பட்டு, 
 பெண் குழந்தைகள் பாதுகாப்பு ஆசிரியராக அவர்களை நியமித்து, அவா்களுக்கு திறன் வளா்ப்பு பயிற்சி வழங்கிடும் பொருட்டு இன்றைய தினம் ஆசிரியர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி வகுப்பு நடைபெற்றுள்ளது. 


பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதே "வண்ண சிறகுகள்"  திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.  பெண் குழந்தைகளை மனதளவில் வலிமைபடுத்த வேண்டும், குழந்தை திருமணம், இளம் வயது கா்ப்பம், திருமணத்திற்கு முன் கற்பம் இந்த மூன்று முக்கிய காரணங்களால்  பெண் குழந்தைகள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். இவற்றை தடுப்பதற்கு விழிப்புணா்வு மிகவும் அவசியம். குழந்தைகளுக்கு சட்டங்கள் குறித்தும், பிரச்சனைகள் குறித்தும் பள்ளிகளில் ஆசிரியா்கள் விழிப்புணா்வு ஏற்படுத்திட வேண்டும். குறிப்பாக , ஆசிரியா்கள் குழந்தைகளிடம் கலந்துரையாடல், ஆற்றுப்படுத்துதல் மூலம் நல்ல நட்புடன் அணுக வேண்டும்.


சமூகத்தில், பெண் குழந்தைகளுக்கு  வரும் பிரச்சனைகளை எதிர்கொள்வது தொடர்பாகவும், தன்னம்பிக்கையுடன் வாழ்வதற்கும் கற்றுக்கொடுக்க வேண்டும்.  வீட்டில் பெற்றோர்கள் ஆண் குழந்தைகளையும், பெண் குழந்தைகளையும் சரிசமமாக நடத்திட அறிவுறுத்திட வேண்டும். சமூக வளைதளயங்களை குழந்தைகள் பயன்படுத்தும்போது அதன் நன்மை, தீமை குறித்து எடுத்துரைக்க வேண்டும்.


ஆசிரியா்கள் குழந்தைகளிடம் நெருக்கமாக பழகி குழந்தைகளின் மனநிலை குறித்து அறிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு பள்ளியில் குழந்தைகள் மன்றம் விளையாட்டு போட்டிகள் நடத்தி அதன் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்திட  வேண்டும். இந்த திறன் வளர்ப்பு பயிற்சியில் பங்குபெற்றுள்ள அனைத்து ஆசிரியர்களும் இதன் வாயிலாக தெரிவிக்கப்படும் கருத்துக்களை  உள்வாங்கி தங்களது பங்களிப்பினை சிறந்த முறையில் ஏற்படுத்தி "வண்ண சிறகுகள்" திட்டத்தினை அனைத்து பள்ளிகளிலும் சிறப்பாக செயல்படுத்திட உறுதுணையாக இருந்திட வேண்டும் என, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் துரைமுருகன் , மாவட்ட முதன்மை கல்வி அலுவலா்                 பாலமுத்து, துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்)          மரு.ஆ.விஜய் சந்திரன், கூடுதல் காவல்துறை காண்காணிப்பாளா் (குற்றப்பிரிவு) எஸ்.நமச்சிவாயம்  , மாவட்ட கல்வி அலுவலா் (இடைநிலை) மி.உதயகுமார், மாவட்ட கல்வி அலுவலா் (தனியார் பள்ளிகள்) பொன் விஜய சரவணகுமார்  முன்னாள் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் நேருயுவகேந்திரா ஜவகா், குழந்தைகள் நலக்குழு
 தலைவா்  சாந்தி , பள்ளி ஆசிரியைகள் உட்பட பலர்  கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad