மதுரையில் தி.மு.க. சார்பில் நடைபெற இருந்த போராட்டம் வேறு தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 19 ஆகஸ்ட், 2023

மதுரையில் தி.மு.க. சார்பில் நடைபெற இருந்த போராட்டம் வேறு தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மதுரையில் தி.மு.க. சார்பில் நடைபெற இருந்த போராட்டம் வேறு தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 



மதுரை மாவட்ட திமுக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி தேதி மாற்றத்தை அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் நீட் தேர்வை திரும்பப் பெற வலியுறுத்தி தி.மு.க. சார்பில் நாளை போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், மதுரையில் தி.மு.க. சார்பில் நடைபெற இருந்த போராட்டம் வேறு தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா நடராஜ் தியேட்டர் அருகில் நடைபெற இருந்த போராட்டம் வருகிற 23-ந்தேதி புதன்கிழமை அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட திமுக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad