இந்திய தேசத்தின் 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, மோப்பிரிப்பாளையம் பேரூராட்சி, உயிர் சமூக சேவை மையம் மற்றும்
சாந்தி சோஷியல் சர்வீஸ் இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாமில், மோப்பிரிப்பாளையம் பேரூராட்சி, உயிர் சமூக சேவை மையம் நிர்வாக அறங்காவலர்
கே.பி.சசிகுமார் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். நிகழ்வில் சாந்தி சோஷியல் சர்வீஸ் மருத்துவர் டாக்டர் ஸ்ரீனிவாசன், மக்கள் தொடர்பு அதிகாரி சுரேஷ் பாபு, பேரூராட்சி துணைத் தலைவர் பாலசுப்ரமணியம், பூபதி கனகராஜ் ரங்கராஜ் ஜெயராஜ் செல்வராஜ், சூலூர் ஒன்றிய பாஜக தலைவர் மகேந்திரன் சரவணன், ஊர் பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.. முகாமில் கலந்து கொண்ட 127 நபர்கள் மூலமாக 92 யூனிட் இரத்தம் தானமாக பெறப்பட்டது. நிகழ்வின் இறுதியில் பங்கேற்ற அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக