பந்தலூர் அருகே சேரம்பாடி சமுதாய கூடத்தில் மகளிர் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சமுக நலத்துறை நலதிட்ட அலுவலர் லீலா தலைமை தாங்கினார்.
சேரங்கோடு ஊராட்சி மன்ற உறுப்பினர் பார்வதி முன்னிலை வகித்தார்.
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது
மகளிர் நலனில் அதிகம் பாதிப்பது ஊட்டச்சத்து குறைபாடு முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் பெண்களுக்கு அதிக அளவில் நோய்கள் தாக்கி வருகிறது..இதற்கு முக்கிய காரணமாக ஊட்டச்சத்து உணவுகளை அதிகம் எடுத்து கொள்வதில்லை. மேலும் விரைவு உணவுகள், சுவையூட்டி உணவுகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதுடன் புற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்கும் ஆளாகும் சூழல் உருவாகிறது. எண்ணெய் யில் பொறித்த உணவுகள் அதிகம் எடுத்து கொள்வதை தவிர்க்க வேண்டும் என்றார். கீரை வகை உணவுகள், காய்கறிகள், பழங்கள் அதிகம் எடுத்து கொள்ளவும் வீடுகளில் கீரைகள் அதிகம் வளர்த்து பயன்படுத்தவும் முயற்சிக்க வேண்டும்.
ரேசன் கடைகளில் ஊட்ட சத்துக்கள் சேர்த்து செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படுகிறது. இவற்றை முறையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். அதுபோல் அயோடின் பற்றாக்குறையால் பெண்கள் அதிகம் பாதிக்கின்றனர். எனவே ரேஷனில் வழங்கும் அயோடின் கலந்து அரசு உப்பினை வாங்கி பயன்படுத்த வேண்டும் என்றார்.
மகளிர் உதவி மைய பொறுப்பாளர்கள் வளர்மதி, தீப்தி ஆகியோர் பேசும்போது
மகளிர் பாதிப்புகளுக்கு நிவாரணம் பெற மகளிர் பாதுகாப்பு மையம் செயல்படுகிறது. குடும்ப பிரச்சனைகள், மற்றும் பணியிடங்களில் ஏற்படும் பாலியல் வன்கொடுமைகளில் பாதிக்கப்பட்டவர்கள் 181 என்கிற உதவி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அவர்களுக்கு தங்குவதற்கு உதவிகள் செய்து தரப்படும் என்றனர்.
ஏகம் பவுண்டேஷன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவீந்திரன் பெண்களுக்கு ஏற்படும் நோய்கள் அதற்கான தவிர்ப்பு வழிமுறைகள் குறித்து விளக்கம் அளித்தார்.
ஆல் த சில்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் சிறு குழந்தைகள் திருமணம் செய்வது போக்சோ சட்டபடி தண்டனைக்குரிய குற்றம் என்றார்.
சேரங்கோடு ஊராட்சி அளவிலான மகளிர் கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் மகளிர் குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக