திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திராவிட கழக மாணவரணி, திராவிட கழக இளைஞரணி நடத்தும் நீட் தேர்வை எதிர்த்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இளைஞரணி மாநில துணை செயலாளர் சிற்றரசன் தலைமை தாங்கினார். மாவட்ட மாணவர் அணி தலைவர் உலகன்,மாநில பொருளாளர் மகளிர் அணி அகிலா மற்றும் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த கிளை மாவட்ட ஒன்றிய பொறுப்பாளர்கள் கண்டன உரை திராவிட கழக மாவட்ட தலைவர் எழிலரசன், மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கோசங்கள் எழுப்பினர். நீட் விலக்கு மசோதாவிற்கு முட்டுக்கட்டை போடும் தமிழக ஆளுநரை திரும்ப பெறுக. நீட் தேர்வின் தோல்வியால் தற்கொலை செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50 க்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்றனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக