திருப்பூர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகர்வோர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் 24-9-2023 அன்று வியாழக்கிழமை மதியம் மூன்று மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் அறை எண் இருபதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய் பீம் தலைமையில் நடைபெற உள்ளது.
கூட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு முகவர்கள் மற்றும் எண்ணெய் நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர். மேற்படி குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகர்வோர்களின் புகார்கள் குறைபாடுகள் இருப்பின் தங்களது எரிவாயு இணைப்பு புத்தகம் அல்லது அடையாள அட்டையுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு கூறியுள்ளனர்.
- மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக