இராணிப்பேட்டை எஸ்.எம்.எச் செவிலியர் கல்லூரியில் சைபர் கிரைம் விழிப்புணர்வு நிகழ்ச்சி. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 21 ஆகஸ்ட், 2023

இராணிப்பேட்டை எஸ்.எம்.எச் செவிலியர் கல்லூரியில் சைபர் கிரைம் விழிப்புணர்வு நிகழ்ச்சி.

இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D.V.கிரண் ஸ்ருதி,  இ.காப.,  உத்தரவின்படி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குமார்.  (இணைய வழி  குற்றப்பிரிவு)  மேற்பார்வையில், காவல் ஆய்வாளர் ராஜாகுமார்   தலைமையில், சைபர்கிரைம் விழிப்புணர்வு நிகழ்ச்சி இராணிப்பேட்டை S.M.H நர்சிங் கல்லூரியில் நடைபெற்றது.


சைபர் கிரைம் விழிப்புணர்வு நிகழ்ச்சியில்  நிதி நிறுவன மோசடி,போலி சமூக ஊடக கணக்குகள் மோசடி,போலி கடன் செயலி மற்றும் சைபர் கிரைம் உதவி எண்:1930, www.cybercrime.gov.in இணையதள முகவரி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்,  உதவி ஆய்வாளர்  தியாகராஜன்  CCPS,  சுமார்  150  கல்லூரி மாணவர்கள், 10 ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad