இதை அடுத்து, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அர்ச்சனைகள் நடந்தது, இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர் இதே போல, மதுரை மேலமடை, தாசில்தார் நகர் அருள்மிகு சௌபாக்கிய விநாயகர் ஆலயத்தில், ஆடி வெள்ளிக்கிழமை முன்னிட்டு, இக்கோவில் அமைந்துள்ள வராகி அம்மன் மற்றும் துர்க்கை அம்மனுக்கு பெண்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது.
இதை அடுத்து, வராகி மற்றும் துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. பக்தர்கள், வராகி அம்மனுக்கு மஞ்சள் மாலை அணிவித்தும், பானகம், மாவிளக்கு படைத்தும் வழிபட்டனர். இதே போல ,மதுரை வர சித்தி விநாயகர் ஆலயத்திலும் துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் ஆடி வெள்ளிக்கிழமை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசித்தனர்.
இதேபோல, மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் ஆலயத்திலும், ஏராளமான பெண்கள் தீபமேற்றி அம்மனை வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை, ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர். மதுரை மாவட்டம், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் ஆலயம், திருமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர், சோழவந்தான் விசாக நட்சத்திர ஸ்தலமாக பிரளயநாத சிவன் ஆலயத்திலும், ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி, துர்க்கை அம்மனுக்கு பக்தர்கள் அர்ச்சனைகள் செய்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக