திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த நீப்பத்துறை தென்பண்ணை ஆற்றில் அருள் பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ சென்னியம்மன் ஆலயத்தில் ஆடி 18 ஆடி பெருக்கு விழா வெகு விமர்சையாக நடைபெறும்.
இவ்விழாவிற்கு ஒரு நாள் முன்பு செங்கத்தில் இருந்து சுமார் 35 கிலோமீட்டருக்கு மாட்டு வண்டியில் வரிசையாக சென்று தென்பண்ணை ஆற்றில் நீராடி சென்னியம்மனுக்கு பொங்கலிட்டு ஆடு, சேவல் போன்றவற்றை பலி கொடுத்து வழி படுவது வழக்கம். இந்நிலையில் நேற்று செங்கத்தை அடுத்த புதுப்பட்டு, ஆலப்புத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் பழமையான முறையில் மாட்டு வண்டியில் ஆடு மற்றும் சேவல்களை எடுத்து கொண்டு உறவினர்களுடன் பொங்கல் வைக்க சென்ற அருமையான காட்சி.
- செங்கம் தாலுக்கா செய்தியாளர் கலையரசு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக