கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியத்திற்கு உட்பட்ட அனுமன் தீர்த்தம் பகுதியில் இருக்கும் அனுமந்தீஸ்வரர் கோயில் வரலாற்று சிறப்புமிக்க ஒரு கோயிலாக இங்கு பக்தர்களிடம் திகழ்ந்து வருகிறது இக்கோயில் முறையான பராமரிப்பு இன்றி சிலைகள் சேதம் அடைந்தும் கோபுரம் ஆகியவை முழுமையான பராமரிப்பு இன்றி வருகிறது மேலும் இக் கோயிலில் விசேஷ நாட்களில் பெண்கள் மற்றும் ஆண்கள் இங்கு செல்லும் கங்கையை நீராடுவது வழக்கம் இக்கங்கையில் பெண்கள் குளித்துவிட்டு உடைகளை மாற்றுவதற்கு கூட முறையான ரூம் வசதிகளும் கழிப்பிட வசதிகளும் எதுவும் இல்லை.
எனவே பல ஆண்கள் இங்கு நீராடும்போது தங்களது மனதை மறந்து இறைவனை மேல் பக்தி கொண்டு உடைமாற்றும் போது மிகவும் ஒரு அச்சத்துக்குரிய விஷயமாக உள்ளது எனவே இந்து அறநிலைத்துறை ஆணையாளர் இக்கோயிலை ஆய்வு செய்து இக் கோயிலுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பார்களா என்பது இங்கு வரும் பக்தர்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது உடனடியாக ஆய்வு மேற்கொள்வார்களா???
- கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் எஸ்.சத்திய நாராயணன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக