காலையில் போடப்பட்ட புதிய தார் ரோடு இரவில் தோண்டப்பட்டு சேதப்படுத்தப்பட்டது! மக்கள் அதிர்ச்சி? - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2023

காலையில் போடப்பட்ட புதிய தார் ரோடு இரவில் தோண்டப்பட்டு சேதப்படுத்தப்பட்டது! மக்கள் அதிர்ச்சி?

திருப்பூர் மாநகராட்சி ஒண்ணாவது மண்டல அதிகாரிகளின் திட்டமிடல் இல்லாத காரணத்தால் ஒரு வேலையை இருமுறை செய்யும் நிலைமை உள்ளது திருப்பூர் மாநகராட்சி ஒண்ணாவது மண்டலம் பத்தாவது வார்டு காயத்திரி நகர் பகுதியில் நேற்று (26-8-2023) காலையில் தார் ரோடு போட்டு கல்பொடிகள் தூவி விட்டு சென்றனர். 


இரவில் அந்த தார் ரோட்டை தோண்டி எடுத்து சேதப்படுத்தி குடிநீர் குழாய் பணிக்காக தனியார் நிறுவனம் வேலை செய்துள்ளது. ஒரு தார் ரோடு போடும் முன் அதை சார்ந்து அந்த பகுதியில் அனைத்து வேலைகளும் முடிக்கப்பட்டதா என்று ஒன்னாவது மண்டல மாநகராட்சி அதிகாரிகள் தனியார் குடிநீர் குழாய் பதிக்கும் நிறுவனங்களில் உள்ள அதிகாரிகளிடம் கலந்தாய்வு செய்து அந்த தார் ரோட்டை முழுதாக போட வேண்டும். சில பணிகளை நிலுவையில் உள்ள நிலையில் அவசர அவசரமாக தார் ரோடு போட்டால் அது இந்த மாதிரி மீண்டும் தோண்டி எடுக்க வேண்டிய நிலைமை தொடர்ந்து உள்ளது.


மேலும் இந்த தார் ரோடு பணி நடக்கும் பொழுது ஒரு அதிகாரியும் மாநகராட்சி ஒன்றாவது மண்டலத்தில் இருந்து வரவில்லை அதிகாரிகள் மேற்பார்வையில் வேலைகள் நடப்பதில்லை அங்கிருந்த பொதுமக்கள் குற்றச்சாட்டாகும் இந்த குழியை மண் போட்டு மூடி வைத்துள்ள நிலையில் இதன் மேல் கற்களை போட்டு தார் ரோடு(பேச் ஒர்க்) போட்டால் அந்த இடத்தில் மண் உள்ளே சென்று குழியாகி விடும் மீண்டும் அந்த இடத்தில் மக்கள் வரிப்பணத்தில் செலவு செய்து பேச்ஒர்க் செய்யும் நிலைமை வரும் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் மேயர் எடுப்பார்களா? 


- மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/