மாணவர்களின் கற்றல் திறமை மேம்படுத்த முதலமைச்சரின் காலை உணவு திட்டம் துவக்க விழா. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 25 ஆகஸ்ட், 2023

மாணவர்களின் கற்றல் திறமை மேம்படுத்த முதலமைச்சரின் காலை உணவு திட்டம் துவக்க விழா.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேவூரில் உள்ள தொடக்க பள்ளியில் மாணவர்களின் கற்றல் திறன் மேம்பட முதலமைச்சரின் காலை உணவு திட்டம் வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் குமாரவேல் பாண்டியன்  தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக நீர்வளம், சட்டமன்றம், கனிமம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சர்  துரைமுருகன் கலந்துக்கொண்டு திட்டத்தை துவக்கி வைத்தார்.


நிகழ்ச்சியில் துரைசிங்காரம், பெரும் குழு தலைவர் வேல்முருகன், ஒன்றிய குழு தலைவர், துணை தலைவர், அரசுத்துறை அதிகாரிகள்,  ஊரக உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துக்கொண்டனர்.



வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad