திருநெல்வேலி முதல் பாலக்காடு வரை இயங்கி வரும் எக்ஸ்பிரஸ் ரயிலை, தற்போது தூத்துக்குடி வரை நீட்டித்து மத்திய ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி வண்டி எண் 16791 பாலக்காடு - தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயில் பாலக்காடு ரயில் நிலையத்திலிருந்து மாலை 4.05 மணிக்கு புறப்படுகிறது. மறுநாள் அதிகாலை 4.50க்கு திருநெல்வேலி வந்தடையும்.
காலை 7 மணிக்கு தூத்துக்குடி வந்தடையும். வண்டி எண் 16792 தூத்துக்குடியில் இருந்து இரவு 9.25க்கு புறப்படும். இரவு 11.20க்கும் நெல்லை சென்றடையும். மறுநாள் நண்பகல் 12 மணிக்கு பாலக்காடு சென்றடையும். இந்த ரயில் விரைவில் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாலக்காடு ரயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், தூத்துக்குடி - பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக நடவடிக்கை மேற்கொண்ட மத்திய அரசுக்கு தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச்சங்க செயலாளர் பிரம்மநாயகம் நன்றி தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக