பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மரு. ராமதாஸ் அவர்களின் 85வது பிறந்த நாளை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி மேற்கு மற்றும் மத்திய ஒன்றிய செயலாளர் மற்றும் ஊடக செயலாளர், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர்கள் ஒன்றிணைந்து முதற்கட்டமாக சுமார் 1000க்கும் மேற்பட்ட பனை விதைகள் கந்திலி மற்றும் காக்கங்கரை சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று விதைக்கப்பட்டன, மேலும் இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு மூன்றாயிரம் பண விதைகள் விதைக்கப்பட உள்ளனர்.
அது மட்டுமில்லாமல் ஒரு வருட காலத்திற்குள் ஒரு லட்சம் பனை விதை விதைக்கப்படும் என்று மாவட்ட வன்னியர் சங்க செயலாளர், பாமக ஒன்றிய செயலாளர்கள், ஒன்றிய ஊடகப் பேரவை செயலாளர் மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள், பசுமை தாயகம் நிர்வாகிகள் குறிப்பிட்டுள்ளார், இதில் மேற்கு ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ், மதிய ஒன்றிய செயலாளர் அசோக்குமார், மாவட்டத் துணைத் தலைவர் பெரியசாமி, வன்னியர் சங்க செயலாளர் பாலாஜி, மற்றும் ஊடக பேரவை ஒன்றிய செயலாளர் மோ, அண்ணாமலை மற்றும் நிர்வாகிகள் அகத்தியன்,அரவிந்தன், திருப்பதி, செந்தில், உள்ளிட்டோரி நிகழ்வில் கலந்து கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக