திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பிற்பகல் முதல் விட்டு விட்டு மழை தொடர்ந்து பெய்து வருவதால் ஆங்காங்கே மரங்கள் சாய்ந்து விடுகின்றன இந்நிலையில் கொடைக்கானல் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியை சுற்றியுள்ள ஏறிச்சாலை பகுதியில் மரம் ஒன்று சரிந்து சாலையின் குறுக்கே விழுந்ததின் காரணமாக அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து வந்த கொடைக்கானல் நகராட்சி பணியாளர்கள் மரத்தை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக