திண்டுக்கல் தாலுகா அலுவலக பகுதி ரோட்டில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 10 ஆகஸ்ட், 2023

திண்டுக்கல் தாலுகா அலுவலக பகுதி ரோட்டில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு.


திண்டுக்கல் மாவட்டம் தாலுகா அலுவலக பகுதி மாவட்ட சிறைச்சாலை எதிர்புறம் திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோவில் தெரு MP தோட்டம் பகுதியைச் சேர்ந்த அக்பர் அலி என்பவரை திண்டுக்கல் ரவுண்ட்ரோடு பகுதியைச் சேர்ந்த தர்மராஜ் என்பவர் ரியல் எஸ்டேட் தொடர்பான பிரச்சனை காரணமாக ஏற்பட்ட தகராறில் தர்மராஜ் தான் மறைத்து வைத்திருந்த அறிவாளால்  அக்பர் அலியை வெட்டினார்.


இதில் அக்பர் அலி படுகாயம் அடைந்தார், மேலும் காவல்துறைக்கு பொது மக்கள் தகவல் கொடுத்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நகர் வடக்கு காவல் துறையினர் அக்பர் அலியை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும்  இச்சம்பவம்  தொடர்பாக நகர் வடக்கு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு உள்ளனர். 


- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன். மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad