வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன், அணைக்கட்டு தாலுகா பொய்கை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கட்டப்பட்டுள்ள புற நோயாளிகள் பிரிவை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கும் விதமாக கல்வெட்டினை திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து புற நோயாளிகள் பிரிவில் வைட்டல் பே தனிப்பிரிவு தொடங்கி வைத்து, மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்களையும் பொருத்தினார்.
பின்னர் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரியின் 13-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு, எம்.பி.பி.எஸ். மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். இதனை தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:- அடுக்கம்பாறை ஆஸ்பத்திரியில் பலத்த பாதுகாப்பு இருக்கும் நிலையில் அறிமுகம் இல்லாத நபர் எப்படி உள்ளே நுழைந்து குழந்தையை கடத்தி சென்றார் என்பது குறித்து குழு அமைத்து டாக்டர்கள், பணியாளர்கள், உள்ளிட்டோர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க பாதுகாப்பு பலபடுத்தப்படும் என்றார்.
- செய்தியாளர் சுரேஷ்குமார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக