ஊத்தங்கரையில் முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்தநாள் விழா.
ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் சார்பில், முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாள் விழா நான்குமுனை சந்திப்பில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு வட்டார தலைவர் திருமால் தலைமை வகித்தார். நகரத் தலைவர் விஜயகுமார், மாவட்ட செயலாளர் கணபதி, நிர்வாகிகள் இளையராஜா, ராமு, ஏழுமலை, பூகடைமகி, சின்னசாமி, சிவராமகிருஷ்ணன், சாதிக் பாஷா உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு, ராஜீவ் காந்தியின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர்
எஸ். சத்தியநாராயணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக