புதுக்கோட்டை மாவட்டம் காமராஜ் நகர் டாக்டர் ஏபிஜெ அப்துல் கலாம் மக்கள் நலச்சங்கம் ஏற்பாட்டில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு ஸ்மார்ட் டிவி வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு 32 இஞ்ச் ஸ்மார்ட் தொலைக்காட்சி வழங்கப்பட்டது.காமராஜ் நகர் டாக்டர் ஏபிஜெ அப்துல் கலாம் மக்கள் நலச்சங்க ஏற்பாட்டில் சங்கத்தின் தலைவர் ஸ்ரீ பிரசன்னா சரவணன் தலைமையில் கண்டியாநத்தம் ஊராட்சி மன்றத்தலைவர் செல்வி முருகேசன் முன்னிலையில்
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் கல்வி கற்கும் விதமாக சமூக ஆர்வலர் நடராஜன் கிருஷ்ணனின் பத்தாயிரம் நிதி பங்களிப்பில் 32 இஞ்ச் ஸ்மார்ட் டிவியை அப்பள்ளி தலைமையாசிரியர் சுமித்ரா அவர்களிடம் கண்டியாநத்தம் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் முருகேசன், அப்துல்கலாம் மக்கள் நலச்சங்கத்தினர் வழங்கினர். இந்நிகழ்வில் அப்பள்ளி ஆசிரியர்கள்,சத்துணவு அமைப்பாளர் வத்துமலை ராசு,பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் யசோதா, ஊர் முக்கியஸ்தர்கள் சந்திரன்,மோகன், கண்ணன், அப்துல்கலாம் மக்கள் நலச்சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் என பலர் உடனிருந்தனர்.
எம். மூர்த்தி, தமிழக குரல், மாவட்ட செய்தியாளர், புதுக்கோட்டை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக