சிவகங்கை இந்து சமய அறக்கட்டளை சார்பில் வள்ளலார் - 200 முப்பெரும் விழாவை முன்னிட்டு காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப் பள்ளியில் கல்லூரி மாணவர்களுக்கு ஒப்புவித்தல், ஓவியம், பாடல், கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெற்றன.
அழகப்பா அரசு கலைக் கல்லூரி சார்பில் முப்பதிற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் போட்டிகளில் பங்கேற்றனர். ஒப்புவித்தல் போட்டியி்ல் தொழில் நிர்வாகவியல் இரண்டாம் ஆண்டு மாணவி கீர்த்தனா முதல் பரிசும், கணினி அறிவியல் மூன்றாம் ஆண்டு மாணவி ரதிமலர் இரண்டாம் பரிசும் பெற்றனர். பாட்டுப் போட்டியில் ஆங்கிலத்துறை முதலாம் ஆண்டு மாணவி அன்னபூரணி முதல் பரிசும், கட்டுரைப் போட்டியில் ஆங்கிலத்துறை மூன்றாம் ஆண்டு மாணவி பூமிகா இரண்டாம் பரிசும், ஓவியப்போட்டியில் ஆங்கிலத்துறை முதலாம் ஆண்டு மாணவர் யுவராஜ் இரண்டாம் பரிசும் பெற்றனர்.போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு LCTL பழனியப்பச் செட்டியார் நினைவுக் கலையரங்கத்தில் நடைபெற்ற விழாவில் பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்றுக் கல்லூரிக்குப் பெருமை சேர்த்த மாணவ, மாணவிகளைக் கல்லூரி முதல்வர் பெத்தாலெட்சுமி பாராட்டினார். நுண்கலை மன்ற ஒருங்கிணைப்பாளர் மார்டின் ஜெயப்பிரகாஷ் மற்றும் நுண்கலை மன்ற உறுப்பினர்கள் லெட்சுமணக்குமார், ஷர்மிளா உள்ளிட்டோர் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
மாவட்ட செய்தியாளர் முத்துராஜன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக