புவனகிரி அருகே கோழி ஏற்றி செல்லும் வாகனம் மோதி இருசக்கர வாகனத்தில் வந்த கணவன் மனைவி பரிதாபமாக உயிரிழப்பு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 28 ஆகஸ்ட், 2023

புவனகிரி அருகே கோழி ஏற்றி செல்லும் வாகனம் மோதி இருசக்கர வாகனத்தில் வந்த கணவன் மனைவி பரிதாபமாக உயிரிழப்பு.

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே ஆதிவராகநத்தம் பகுதியில் புவனகிரி விருத்தாசலம் சாலை செல்கிறது. இந்த சாலையில் சுடுகாடு அருகில் புவனகிரியில் இருந்து விருத்தாசலம் பகுதி நோக்கி  கோழி ஏற்றி செல்லும் வாகனம் சென்று கொண்டிருந்தது. அப்போது சிதம்பரம் வஉ சி நகரைச் சேர்ந்த மணிகண்டன்(35), ஹேமா(28) தம்பதியினர் வேப்பூருக்கு குலதெய்வ வழிபாட்டுக்காக சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் சிதம்பரம் நோக்கி வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.


அப்போது கோழி ஏற்றும் வாகனம் எதிர்பாராமல் அவர்கள் வந்த இருசக்கர வாகனத்தின்  மீது மோதி கோழியுடன் வாகனம் கவிழ்ந்தது . இதில் இரு சக்கர வாகனத்தில் வந்த மணிகண்டன்(35) ஹேமா(28) தம்பதியினர் சம்பவ இடத்திலேயே தலை மற்றும் உடல் நசுங்கி பலியானார்கள். மேலும் இந்த விபத்தில் ஹேமாவின் தலை தனியாக துண்டிக்கப்பட்டு தனியாக கிடந்தது. இந்த கொடூர விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். 


மேலும் கோழி ஏற்றி செல்லும் வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுநர் தப்பி ஓட்டம் பிடித்தார். போலீசார் அவரைத்தேடி வருகின்றனர். முக்கியமாக இந்த விபத்து பகுதியில் நீண்ட காலமாக சுடுகாடு இருந்து வருகிறது. அதனால் ஒரே இடத்தில் சாலையில் கிட்டத்தட்ட இதுவரை 10க்கும் மேற்பட்ட விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. இந்த குறிப்பிட்டப் பகுதியில் நடைபெறும் தொடர்  விபத்துகளை கண்ட அப்பகுதி மக்கள் அருகே  சுடுகாடு இருப்பதால் அடிக்கடி ஏற்படும் உயிரிழப்புகளுக்குக் காரணம் ஆவிகள்வேலையா? அல்லது ஏதோ ஒரு அமானுஷ்ய சக்தி குறிப்பிட்ட இந்தப் பகுதியை குறிவைத்து செயல்படுகிறதா? என்றும்  தங்களுக்குள் பீதியுடன் பேசிக் கொள்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad